Tuesday, 1 November 2022

#பழனியும் முருகன் சிலையும்



பழனியும் முருகன் சிலையும் :---

எனக்கு நீண்டநாளாக பழனி திருஆவினன்குடி பற்றியும் மலைமேல் உள்ள முருகன் சிலைக்கும் உள்ள தொடர்புகள் முன் பின் முரணாக உள்ளது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று எண்ணி வந்தேன். அதன் தொடர்பாக நான் முதலில் சித்தர் நூல்களில் என்தேடலை ஆரம்பித்தேன். அவ்வாறு என்தேடலில் கிடைத்த விபரங்களை இதன் மூலம் பதிவு செய்து வெளியிடுகிறேன்.

முதலாவதாக போகர் ஜெனன சாகரம் என்னும் நூலில் இருந்து  கிடைத்த தகவல்களின் படி பார்ப்போம்.

கொண்டதொரு பிள்ளை இரண்டுக்கு உபதேசித்துக்

குவலயத்திற் பெண் கொண்டுவாரு மென்றேன்

கண்டதொரு சாதி எல்லாம் வேண்டாம் பிள்ளாய்

கருவான முதற்சாதிப் பெண்ணே வேணும்

அன்டபுவனத்தில் ஆயிரத்திலொன்று

அறிதாகப் பிறந்திருக்குமது தான் வேண்டும்

விண்டதொரு கருக்கலெள்லாம் சொல்லிவைத்து

மேலான வசனமுஞ்செப்பினேனே

         --- போகர் ஜெனன சாகரம் – 120

 

செப்பினேன் வசனமுஞ் செய்யத்தானுஞ்

செகத்திலொரு கருத்தேடிவா நீ என்றேன்

செப்பினேன் கண்ணாடியொன்று செய்து

அதனாலே ஆச்சரியமெல்லாம் தோன்ற

செப்பினதோர் பெண்கள் தனைக் கொண்டு வந்தான்

ஒருநாள் தான் செய்ததொரு மார்க்கங்க்கேளு

செப்பினதோர் கல்லொன்றையுப தேசித்து

கன்னியைப் போற்கொண்டுவந்து காட்டினாரே

                                                                              --- போகர் ஜெனனசாகரம் – 121

 

காட்டினார் கல்லதனைப் பெண்ணைப் போலக்

கற்ற வித்தை என்னிடத்திற் காட்டவென்று

காட்டினேன் காக்கைஎன்னும் பறவையாக்கி

முப்பிறப்பு பிறக்க வென்று சாபம் ஈந்தேன்

காட்டினேன் கவடில்லா மனிதரென்று

நல்லபிள்ளை என்று சொல்லி நடந்துவிட்டேன்

காட்டினேன் குருந்தமர நிழலைப் பார்த்துக்

குறித்த தலம்மிது என்று பள்ளி கொண்டேன்பாரே

---- போகர்ஜெனனசாகரம் – 122

போகரது மேற்கண்ட நூலின் பாடலின் மூலம் போகர் முதல் சாதி பெண் வேண்டியதையும் தன் சிஷ்யர்கள் இருவரிடமும் கூறி கொண்டுவரச் சொன்னதையும் தெரிவிக்கிறார். அதற்கான ஆலோசனையும் வழங்குகிறார். ஆனால் சிஷ்யர்கள் இருவரும் ஆச்சரியம் தோன்ற அத்தகையதோர் பெண்தனைக் கொண்டு வந்தனர் நானும் நம்பி கன்னியைச் சேர்ந்து உண்மைதனை அறிந்து கோபம் கொண்டு தன்னிடம் கற்ற வித்தையை என்னிடத்தில் காட்டியதற்காக அவர்களை காக்கையாக மூன்று முறை பிறந்து திரியுமாறு சபித்து பின் நான் குருந்தமர நிழலில் தங்கினேன். இனி போகர் ஜெனன சாகரம் நூலை அடுத்து கருவூரார் பலதிரட்டு -300 என்னும் கந்தசாமி முதலியார் அவர்களால் (1927)ல் வெளியிடப்பட்ட நூலில் இருந்து பாடலையும் செய்தியையும் பார்ப்போம்.

முக்தனாம் போகருக்குத் பெண்தான் தேடி

மூவுலகும் பார்த்தோடிக் காண்கிலாமல்

சித்தனாம் கொங்கணரும் நானுங்கூடிச்

செய்வதென்ன கன்னியரைக் கண்டிலோமே

மெய்த்தியாய் நாமினி எங்கே பார்ப்போம்

வழியாச்சு தென்று சொல்லி வாடி வருத்தமாய்

உத்தமா மண்டபத்தில் சிலைதா னொன்று

உருவுபடியாயிருக்க நாயனாருக்கு அழைஎன்றாரே

அழைஎன்று அண்ணல் சொல்லி திறம்பார்த்தீரோ

அழைக்கிறேன் மண்டபத்தின் சிலையே வரும்

அழையென்று கற்சிலையை வாவா வென்றேன்

அடுத்துவரக் கூட்டிப்போய் குருமுன்விட்டோம்

 

வினை என்ற மோகத்தால் போகனாதன்

மேவிய போதந்தவிகற்ப மென்றே

விளைவின்றிக் குறைவனையன்றிவார்த்தையன்றி

வந்ததிந்த மார்க்க மென்ன கண்டிலோமோ

கண்டிலே னென்ற குருவார்த்தை கேட்டுத்

கன்னியரை மூவுலகும் தேடிக்காணோம்

அண்டிலோர் மண்டபத்தில் சிலைதா னொன்று

அழகுமெத்தவளை அழை என்று கொங்கணர் தான் சொன்னார்

மண்டபத்தில் நின்றலந்த சிலையைப் பார்த்து

வாவா நீயென்று சொல்ல சிலைதானேகி

வண்டிலருங் கூந்தலசைய நடந்து இங்கே

வந்ததினால் கூட்டியிங்கே வந்திட்டோமே

வந்திட்டோமென்றுசொல்லிப் பாதத்தில் வீழ்ந்து

மதிமயங்கி உங்களுக்கு அழைத்திங்கே

அளித்திட்டோம் அடியேங்கள் அறிவில்லாமல்

இடும்பு செய்தோம் பொறுத்தருளும் எந்தன் கோவே

அறிந்திட்டோம் கற்ச்சிலையைப் பெண்னென்றிங்கே

அழைத்து வந்தோர்கள் திறமார்க்குன்டாகும்

அறிந்திட்ட சித்தரிட திறமோ கொஞ்சம்

என்மக்கள் சாபத்தால் அதிகமாச்சே

                                     :-- கருவூரார் பலதிரட்டு –300

மேற்கண்ட பாடலில் கருவூரார் போகநாதர் கூறியதை அனுசரித்து தானும் கொங்கணரும் போகனாதருக்கு பெண் தேடி மூன்று உலகங்களும் சுற்றியும் முதல் சாதிப் பெண் கிடைக்கவில்லை இனி நாம் என்ன செய்வது என்று வருந்தி இருவரும் சுற்றிய களைப்பினால் பழனிக்கு அருகில் ஒரு ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கினர். அப்போது அவ்மண்டபத்தில் இருந்த கற்சிலை ஒன்று தங்கள் குருநாதர் கூறியபடி உடல் அமைப்புகளுடன் இருக்க அச்சிலையை வாவா என்று அழைக்க அச்சிலையும் உயிர் பெற்று வர நாங்களும் அழைத்துச் சென்று அந்தக் கன்னியை குரு போகனாதரிடம் விட்டோம். அந்தக் கன்னியை அவரும் கலவியில் இணைந்த போது அது கற்சிலை என்று அறிந்து அவர்களை நோக்கி கேட்க அவர்களும் தாங்கள் மூன்று உலகு சுற்றியும் தாங்கள் கேட்ட உத்தம சாதிப் பெண் கிடைக்கவில்லை அதனால் மண்டபத்தில் இருந்த சிலையைப் பார்த்து வாவா என்று அழைக்க அது உயிர் பெற்று வந்ததால் அழைத்து வந்து விட்டோம். எங்கள் பிழை பொருக்க வேண்டும் என்று கேட்டனர்.இது கேட்ட போகர் தனுக்கு சாபம் ஏற்பட்டு விட்டதாக சொல்லி தங்களை காக்கையாக பிறந்து மூன்று பிறப்பு பிறக்க சொன்னார்.

குறிப்பு :-- இந்தச் சிலையைக் கன்னி வாடி என்று அழைத்ததால் அந்த ஊர் இன்றும் கன்னிவாடி என்று அழைக்கப்படுகிறது. இது பழனி திண்டுக்கல் சாலையில் ஒட்டன்சத்திரம் அருகில் செம்பட்டிக்கு பிரியும் சாலையில் உள்ளது. இனி புலிப்பாணி சித்தர் நூலில் இருந்து பார்ப்போம்.       

 

 :-------   புலிப்பாணி – 500 என்னும் நூல் 1915 மதுரை குருசாமிக் கோனார் மற்றும் மு.கிருஷ்ணப்பிள்ளை அவர்களால் பிரசுரிக்கப் பட்ட 1916நூலில் இருந்து :-

தானான முன் யுகத்தில் பிரமாவுக்குத்

தாயான பார்வதியாள் தந்த சாபம்

கோனான தண்டாயுதம் பூசித்துக்

கொடிதான சாபமது நிவர்த்தியாச்சு

தேனான திரேதா யுகத்திலப்பா

தேவேந்திரனுக்கு துருவாசர் சாபம்

மானான தேவர்கோன் பூசைசெய்து

மைந்தனே முனிசாபம் தீர்ந்துபோச்சே.

                         ----- புலிப்பாணி -500 (142)

போனபின்பு சொக்கலிங்கந் தன்னையர்ச்சித்துப்

பொன்னுலகில் தேவேந்திரன் பட்டமாச்சு

ஆனபின்பு துவாபுரியில் போகநாதர்

அடைவான கற்சிலையில் அம்மனொன்று

போனபின்பு கொங்கனருங் கருவூராரும்

கூட்டிவந்து முன்விட்டார் அய்யன்முன்னே

போனபின்பு கற்சிலையைச் சேர்ந்தபோது

சிந்தைதனிற் சிலைஎன்று அறிந்திட்டாரே

                                         ----- புலிப்பாணி – 500 (143)

அறிந்தபின்பு அச்சிலையைப் பார்த்து அம்மா

அபசார அடியேற்கு நிவர்த்தியென்ன

அறிந்தபின்பு சிவகிரியில் தண்டபாணி

மன்னவரை பூசிக்க நிவர்த்தியாகும்

அறிந்தபின்பு தேவி என்ற சிலைதான் சொல்லப்

போகருமே துவாபுரியில் பூசை செய்தார்

அறிந்தபின்பு அபசாரம் நிவர்த்தியாச்சே

சார்வான கலியுகத்தில் சொல்லக்கேளே 

                         --- புலிப்பாணி -500 (144)

கேளே நீ கலியுகத்தில் இருநூற்றைந்தில்

கேசரிபோல் புலிப்பாணி பேரும்பெற்றேன்

கேளே நீ சலந்திரட்டிக் கரத்திலேந்தி

சுகமாக வேங்கையின் மேல் ஏறிச்சென்று

கேளே நீ சிவகிரியில் தண்டபாணி

நாதரடிபூசித்து அருளைப் பெற்று

கேளே நீ போகரிட குகைமேலை யான்

அஷ்டசித்தி பதிதனிலே வாழ்ந்தேன்பாரே

                                       --- புலிப்பாணி – 500 (145)

மேற்கண்ட புலிப்பாணியின் பாடலின் படி முன்பு ஒரு யுகத்தில் பிரமனுக்கு பார்வதியானவர் தந்த சாபத்தின் விளைவாக ஏற்பட்ட காரணமாக சாப நிவர்த்திக்காக தண்டாயுதத்தை பூசித்து அந்த கொடிய சாபத்தில் இருந்து விடுபட்டார். அதன் பின் திரேதாயுகத்தில் இந்திரனுக்கு துருவாச முனிவர் சாபம் கொடுத்து அதனால் உண்டான விளைவுகளில் இருந்து விடுபட சொக்கலிங்கம் தன்னை வணங்கி சாபம் நீங்கி மீண்டு தேவேந்திரன் பட்டம் பெற்றான். அதன் பின் போகநாதர் தன ப்ரியங்க யோகச் செயலுக்காக (ப்ரியங்க யோகம் என்பது கலவியின் போது விந்து வெளிவிடாது இருந்து செய்யும் ஒரு யோக நிலையாகும். தன சிஷ்யர்களான கொங்கணரிடமும், கருவூராரிடமும் முதல் சாதிப் பெண் வேண்டிக் கேட்டதற்கு ஏற்ப அவர்கள் பெண் தேடிச் சென்று மூவுலகு சுற்றியும் கிடைக்காமல் போக ஒரு மண்டபத் தூணில் இருந்த பெண் கற்சிலையைப் பார்க்க அது குருநாதர் கூறிய முதல் சாதிக்குரிய அங்க அமைப்புகள் இருந்ததால் தங்கள் வலிமையால் அதனை உயிர் பெறச் செய்து போகனாதரிடம் அழைத்து வந்துவிட அவர் அதனை கற்சிலை என்று அறியாது கலவியில் ஈடுபடும் போது அது தேவி சிலை என்று அறிந்து தான் தவறு செய்ததை தேவியிடம் வருந்திக் கேட்டதன் படி தேவியாகிய சிலையும் சிவகிரியில் உள்ள தண்டாயுதபாணியை வணங்கினால் குற்றம் நீங்கும் என்று கூற அவரும் வணங்கி நிவர்த்தி பெற்றார் என்றும் இது துவாபர யுகத்தில் நடை பெற்றதாகவும் இதன் பின் கலியுகம் 205 ல் புலிப்பாணி நீரை திரவநிலையில் இருந்து திட நிலைக்கு மாற்றி கையில் எடுத்துச் சென்று ஊற்றி வழிபட்டதாக போகர் வாழ்ந்த குகையில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அனால் இம் மூன்று சித்தர்களின் பாடல்களிலும் எந்த ஒரு இடத்திலும் போகர் நவபாசன சிலை செய்ததாக கூறப்படவில்லை. பழனியை அடுத்துள்ள சிவகிரிப்பட்டி என்னும் கிராமத்திற்கு உட்பட்டது இடும்பன மலை என்று தற்காலம் வழங்கப்படும் சக்திமலையும் பழனிமலை என்று வழங்கப்படும் சிவமலையும் ஆகும் இந்த சிவமலையானது சிவகிரி என்ற பெயரில் இலக்கியங்களிலும், புராணங்களிலும் வழங்கப் படுவதால் அதே பெயரே இக் கிராமத்திற்கும் வழங்கப் படுகிறது பழனி மழையும் சிவகிரி கிராமத்திற்கு உட்பட்டதே.

பழனியும் – திருஆவினன்குடியும் :----   . 

இதுவரை பழனி மலையில் உள்ள முருகன் சிலை பற்றி பார்த்தோம் இதில் போகர் தண்டாயுதபாணி சுவாமி சிலையை வணங்கியதாகத் தான் செய்தியுள்ளதே தவிர போகர் நூல்களிலோ அல்லது வேறு சித்தர் நூல்களிலோ இதுவரை போகர் சிலை செய்தற்கான விபரங்கள் இல்லை. அது போல் முருகன் சிலை நவ பாசனமா அல்லது பஞ்ச பாசனமா அல்லது ஒரே பாசனமா என்பதும் எந்த சித்தர் நூலிலும் இல்லை. இனி இதில் புராணக்கதை இணைக்கப்பட்டு பழனி என்ற பெயரும் அதில் கூறப்பட்டு உள்ள பாலசுப்பிரமணியர் பற்றியும் பார்ப்போம். பழனி மழைக் கோவில் சுவாமி சிலையும் அதை பூசை செய்து வந்தவர்களும் பிராமணர் அல்லாதவராகும். கி.பி. 1623 – 1659 ல் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் படைத்தளபதியாக இருந்த இராமப்ப அய்யரின் உத்திரவுப் படியே கொடுமுடியில் இருந்து பிராமணரை பூசை செய்ய பணித்தார். அதன் பின்பே பிராமணிய வழக்கப்படி குமார தந்திரம் என்னும் முறையில் பூசைகள் செய்யப்பட்டு வருகிறது.

       தமிழக வரலாற்றில் பல்லவர்கள் காலத்திற்கு பின்பே சமஸ்கிருதமும், ஆரியமும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என்பது வரலாற்று ஆய்வர்களின் முடிவு. தமிழர்களும் தங்கள் தொன்மை பண்பாடுகளை மறந்து ஆரியம், மற்றும் பிறநாட்டினரின் படையெடுப்புகள் காரணமாகவும் பிற பண்பாடுகளை ஏற்றுக் கொள்ளத் தலைப்பட்டனர்.

       பழனித் தலவரலாறு  சுமார் இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாகும். இது கந்தபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. கந்தபுராணம் கி.பி.12 – ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்டதாகும். 18 – புராணங்களும் வடமொழியில் உள்ளவை. இவற்றுள் ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய காண்டத்தில் வரும் முதல் ஆறு காண்டங்களின் தமிழ் மொழிப் பெயர்ப்பே கந்தபுராணம். உற்பத்தி காண்டம், அசுரகாண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது 91 –படலங்களையும் – 10345 பாடல்களையும் உடையது. மாணிக்கவாசகர், கம்பர் முதலானவர்களோடு ஒப்பிட்டு கி.பி. 7- முதல் 17 வரை உள்ள காலப்பகுதியை ஆய்வாளர்கள் கந்த புராணத்திற்கு நிர்ணயிக்கின்றனர். மு.அருணாச்சலம் என்பார் 14 – ம் நூற்றாண்டு என்று முடிவுக்கு வருகிறார். அதன்படி இன்றைக்கு சுமார் 600 ஆண்டுகள் முன் என்று கொள்ளலாம்  மற்றும் கந்தபுராணமும் – கம்பராமாயணமும் இரண்டும் ஒரே மாதிரியான கதைப் போக்கினைக் கொண்டது. பலவிதங்களில் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்.

·        இரண்டின் காலமும் பனிரண்டாம் நூற்றாண்டு.

·        இரண்டின் காண்டங்களும் ஆறு.

·        ஒன்றில் முருகன் தலைவன் மற்றதில் இராமன்

·        கந்தபுராணத்தில் வீரபாகு துணைவன்,  இராமாயணத்தில் இலக்குவன் துணைவன்.

·        கந்தபுராணத்தில் சூரபத்மன் பகைவன், இராமயணத்தில் இராவணன் பகைவன்

·        இரண்டிலுமே பகைவர்களுக்கு மைந்தர்கள் உண்டு.

·        கந்தபுராணத்தில் சிறையிருந்தது சயந்தன் இராமயணத்தில் சீதை

·        கந்த புராணத்தில் போருக்கு காரணம் அசமுகி, இராமயணத்தில் சூர்ப்பனகை.

·        இதுபோல் நிறைய ஒப்பிடுகள் பல ஆய்வுகள் செய்யப்பட்டு நிறுவியிருக்கிறார்கள்.    

பழனித்தல புராணத்திற்கு அடிப்படையானது மேற்கண்ட கந்தபுரானமாகும். புராணங்களின்படி மேற்குத் தொடர்ச்சி மலையில் வடக்கு பாகத்தில் உள்ள வாரகமலை (இது தற்காலம் பன்றிமலை என்று கொடைக்கானல் பகுதியில் உள்ளது.) யின் வடபாகத்தில் உள்ள பரந்த குறுஞ்சி நிலப்பகுதியில் சிவமலை (பழனிமலை) - சத்திமலை       (இடும்பன்மலை) என்றதின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வையாபுரிக் குளம் அதனை அடுத்த பெரியனாயகி அம்மன் கோவில் (தல புராணத்தில் பிரகன்னாயகி என்று வழங்கப் படுகிறது) ஆகிய பகுதிகளைக் கொண்டதே பழனி என்றும் திருஆவினன்குடி என்றும் வழங்கப்படும் ஊராகும். மற்றும் பழனித் தல வரலாற்றை எழுதியவர் பால சுப்பிரமணியன் என்பவராவர். இவர் துளுவ வேளாளர் குலத்தில் பிறந்தவர் (துளுவ வேளாளர் என்பது நம் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் 51 தேசங்களாக அழைக்கப் பட்டு வந்தது அதில் துளுவநாடு என்று குறிப்பிட்ட நாட்டில் வேளாண்மை தொழில் ஈடுபட்டு இருந்தவர்கள் ஆவர் ) இவர் தமிழ் மொழி, சமஸ்க்கிருதம் இரண்டு மொழியிலும் கற்றுத் தேர்ச்சி பெற்று இருந்தார். தஞ்சை அரசரிடம் உள்ள கவிஞர்களை வாதில் வென்று கவிராசன் என்று பட்டம் பெற்றும், சேர சமஸ்தானத்தில் உள்ள சமஷ்கிருதத்தில் வல்லவரின் சிவாகமாம் பற்றி அவர் ஏசியதால் ( கேரளா விஷ்ணு சம்பிராதாயத்தை அதிகம் கடைப் பிடிக்கும் நாடாகும். மற்றும் அதை பரசுராமரின் ஆளுகைக்கு உட்பட்டதாக கூறுவார்) அவரிடம் வாதிட்டு வென்றவர் திராவிட வேத நிர்ணயம் என்னும் நூல் ஒன்றும் இயற்றியவர், இத்தகைய பெரியோரை சேர சமஸ்த்தானத்தினரும், பழனி வாழ் பெரியோர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இத்தலபுராணம் எழுதப்பட்டது. கிரிவல காண்டத்தின் 24 வது அத்தியாயத்தின் அடிப்படையில் எழுதியுள்ளார் இப் புராணக் கூற்றுப்படி கழுத்தில் சதங்கை வடமும், கால்சிலம்பும், தலையின் மீது அழகுமிக்க குடுமியும், தன் ஒளிமிக்க தண்டம் என்னும் ஆயுதத்தை ஒருகையிலும் ஒருகையினை இடையிலும் வைத்தவாறு தோற்றம் அளிக்கும் தண்டபாணி சுவாமி கோவிலை சேரமன்னர்கள் புதுப்பித்ததாக கூறப்பட்டுள்ளது. மற்றும் இக் கோவில் வழிப்பாட்டு முறை மற்ற கோவில்களில் உள்ளது போல் அல்லாமல் குமாராதந்திரம் என்னும் முறைப்படி செய்வதாகும்.

       மற்றும் தலைவன் என்று தலைப் பாட்டு எழுதிய கடவுள் வணக்கப் பாடலில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. சிவமாகிய மலையின் (சிவகிரி) மேல் நெருங்கிய குடுமியும், கோவணத்தை ஆடையாகவும், உபவீதம் என்னும் பூணூல் அணிந்த மார்பும் கையில் தண்டும் கொண்டு ஒரு அந்தனனாய் (உரையில் பிராமனனாய்) பிரமச்சாரி வடிவம் கொண்டு நின்றிருந்த நாயகன் என்று கூறப்பட்டு உள்ளது. கி.பி. 1623க்கு பின்பே பிராமண வழிபாடு முறை வந்துள்ளது மேற்கண்ட இராமப்பய்யரின் பட்டயத்தில் இருந்து அறிகிறோம் அதன் பின் எழுதப்பட்டுள்ள பழனித் தல புராணத்தில் மேற்கண்ட தண்டபாணி சிலையை பிராமணர் ஆக்கி உள்ளதையும் தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும். தல வரலாறு சாலிவாகனம் சகவருடம் 1550 ல் எழுதப்பட்டது. இன்றைக்கு சுமார் மூன்னூறு ஆண்டுகள் முற்பட்டது கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பன்றிமலையே புராண வழக்குப்படி வாரக மலை என்று அழைக்கப்படுகிறது. இதுவே வாராககிரி என்றும் அதில் வெள்ளி அருவி (தற்போது சில்வர் பால்ஸ் என்னும் அழகுடைய அருவி உள்ளது என்றும் இதன் அருகில் சக்தி கிரியுடன் கூடிய சிவமலை உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.                                                        பழனி, திருஆவினன்குடி என்பது சங்ககாலத்தில் வைகாவூர் என்றும் வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் வள்ளல் ஆண்ட ஊராகவும் சொல்லப்படுகிறது இதன் காரணமாகவே இன்றும் மலையை அடுத்து வடபாகத்தில் உள்ள குளம் வையாபுரிக்குளம் என்று அழைக்கப்படுகிறது. அது போல் இங்கு நடை பெரும் பங்குனி உத்திரம் தைப்பூசம் வைகாசி விசாகம் போன்ற அனைத்து திருவிழாக்களும் கீழுள்ள பெரியநாயகி அம்மன்  கோவில் உள்ள சுப்பிரமணியருக்கு    உரியதே தவிர மலை மேல் இருக்கும் முருகனுக்கு உரியது அல்ல  பழனி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவில் பிற்காலப் பட்டதாகும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் அடுத்தடுத்து வந்த கொங்கு நாடு பிற்காலத்தில் மதுரை நாயக்க அரசின் ஒரு ஆட்சிப் பகுதியாக இருந்தது. தொட்ட தேவராயர் என்ற மைசூர் மன்னர் மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதரை கி.பி. 1672 ல் நடந்த போரில் வென்றதை அடுத்து கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய பழனி மைசூர் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டது. பின் ஹைதரின் மகன் திப்பு மூன்றாவது மைசூர் போரில் ஆங்கிலேயரிடம் தோல்வியுற்றதின் காரணமாக பழனி, திண்டுக்கல் பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டன.

       மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்து கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் ஊர்கள் பாளையங்கள் என்று பிரிக்கப்பட்டன. அப்போது பழனியும் இதன் அருகில் உள்ள ஆயக்குடியும் பாளையம் என்று மாறியது. பழனிப் பாளையக்காரரும், ஆயக்குடிப் பாளையக்காரரும் விஸ்வநாத நாயக்கரின் மதுரைப் படையெடுப்பின் போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் உறவின் முறை உடையவர்கள். இவ்விரு பாளையக்காரர்களும் மதுரைக் கோட்டையின் 72 கொத்தளங்களில் இரண்டின் பாதுகாப்பு பொறுப்புக்கு உட்படுத்தப் பட்டு இருந்தார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1865ல் ஏற்படுத்தப்பட்ட தல ஆட்சி சட்டத்தின்படி நகராட்சி முறை கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் கோயமுத்தூர். போன்ற பல ஊர்கள் கி.பி. 1866 ஆம ஆண்டு நகராட்சிகளாயின. 1866 ல் பழனி ஒரு பேரூராட்சி ஆனது .

       பழனி மழைக் கோவில் வழிபாட்டு பணியானது புலிப்பாணி வழி வந்தவர்கள் செய்து வந்தனர். பின்னர் கி.பி. 1623 – 59 வாக்கில் மதுரை திருமலை நாயக்க மன்னரின் படைத் தலைவராக இருந்த இராமப்ப ஐயர் என்ற பிராமணரால் வழிபாட்டுப் பணியில் இருந்த பிராமணர் அல்லாத புலிப்பாணி வழிவந்த பூசை செய்து வந்தவர்களை அகற்றிவிட்டு கொடுமுடியில் இருந்து கொண்டு வரப்பட்ட குருக்கள் என்னும் பிராமணர்களைக் கொண்டு வடமொழிப் பண்பாட்டின் படி புதிய வழிபாட்டினை தொடங்கி வைத்தார். இதன் படி பார்க்கும் போது சுமார் 400 வருடங்களுக்கு முன்தான் பிராமன வழிபாடு வந்துள்ளது அப்படியிருக்கும் போது தலபுராணத்தில் முருகன் சிலை பிராமண வடிவினராய் இருப்பதாய் 300 வருடங்களுக்கு முன் எழுதிய தலபுராணத்தில் திட்டமிட்ட வடமொழிக் கலாச்சாரம் புகுத்தப்பட்டதை அறியலாம் அது போல் கந்தபுராணம் கூறும் ஸ்கந்தன் வரலாறும் பழனி என்ற பெயர்களும் புராணங்களின் அடிப்படையில் புகுத்தப்பட்டது. பழனி வைகாவூர் என்றே அழைக்கப்பட்டது பின்னர் புராணக்கதைகளின் படி பழனி பெயர் ஏற்பட்டு இருக்க வேண்டும். இது போல் போகர் சிலை போகரால் செய்யப்பட்டது என்பதற்கான எந்தக் குறிப்புகளும் தலபுராணம் மற்றும் கந்தபுராணத்திலும் இல்லை அது போல் சித்தர் நூல்களில் புலிப்பாணி, போகர் ஜெனன சாகரம், கருவூரார் நூலின்படியுள்ள தண்டாயுதபாணி சிலை வழிபாடு பற்றி குறிப்பும் இல்லை என்பதையும் அறியவேண்டும்.



 பழனி பெரிய நாயகி அம்மன் அல்லது பிரஹன்னாயகி என்று வழங்கப்படும் திரு ஆவினன் குடிக் கோவில் இதுவே தல புராணத்திலும் திருமுருகாற்றுப்படையிலும் குறுப்பிடும் கோவில் ஆகும் இந்தக் கோவிலே பழனி விழாக்களுக்கு கொடிஎற்றுவதும் ஆகும்.  

 

      திருஆவினன் குடி என்பதற்கு திரு – இலேட்சுமி, ஆ-காமதேனு, இனன்- சூரியன், என்று மூவரும் வழிபட்டதால் திருஆவினன் என்றும்  குடி இருப்பிடம்,  தலம் என்று கூறாலாம் என்பதால் அதனை ஒட்டி திருஆவினன் குடி என்று பெயர் வழங்கப்பட்டதாகவும். இன்னும் ஒரு சாரர் கு – பூமி, டி- அக்கினி என்பதால் திருஆவினன்குடி என்றும் சொல்கின்றனர். மற்றும் திரேதாயுகத்தில் (இரண்டாவது யுகம்) இதில் நித்தியனாதச் சருக்கம் என்னும் பகுதியில் நித்தியநாத முனிவர் பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.அடுத்து மூன்றாவது யுகமான துவாபர யுகத்தில் சுவன குப்தன் என்ற செட்டியார் முக்தி அடைந்தது பற்றி கூறப்படுகிறது. அதேசமயம் சித்தர் நூல்களின் படி திரேதாயுகத்தில் இந்திரனுக்கு சாபம் ஏற்பட்டது பற்றியும் அதனால் ஏற்பட்ட சாபநிவர்த்தி பற்றியும், அடுத்து துவாபர யுகத்தில் போகருக்கு சாபம் ஏற்பட்டது பற்றியும் அவர் சாப நிவர்த்திக்காக தண்டாயுதபாணியை பூசித்து நிவர்த்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது தல புராணத்திலும் இச் சிலை நவ பாசன சிலை என்றோ போகர் வழிபட்டது பற்றியோ கூறப்படவில்லை அது போல் சித்தர் நூல் களில் நித்தய நாதர் பற்றியோ, சுவன குப்த்தன் பற்றியோ குறிப்படப் படவில்லைஎன்பதையும் நாம் அறிய வேண்டும். பொதுவாக யுகங்கள் பற்றிய குறிப்பில்

கிருத யுகம் -------------- 1728000 ஆண்டுகள்

திரேதாயுகம் ------------- 1296000 ஆண்டுகள்

துவாபரயுகம் ------------- 864000  ஆண்டுகள்

கலியுகம் -------------------- 432000 ஆண்டுகள்

இது நான்கு சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும்.  புராண சித்தர் நூல்களின் படி எடுத்துக் கொன்டால் மற்றும் தற்போது கலியுகம் ஐயாயிரம் ஆண்டுகள் என்று கூறுகின்றனர் அதன் படி பார்த்தல் இன்றைய வரலாற்று ஆசிரியர்களின் கணக்குப் படி தமிழோ அல்லது சமஷ்கிருதாமோ எழுத்து வடிவம் பெற்று நடை முறைக்கு வந்து சுமார் மூவாயிரம் ஆண்டுகளே ஆகிறது. எனவே தங்களின் கற்பனைத் திறனுக்கு தக்க படி பெயரும் நிகழ்வுகளையும் கூறிவிட்டார்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். மாற்றும் தல புராணம் பழனி முருகன் என்று அழைக்கப்பட்டு தண்டாயுத பாணி சிலைபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில் திருஆவினன் குடி என்று குறிப்பிடப் படுகிறது அதற்குப்பின் வந்த அருணகினாதரின் திருப்புகழில் பழனி என்ற சொல்லாட்சி வருகிறது கடைச் சங்க நூலான பரிப்பாடலில் திருமால் முருகன் என்ற பெயர்கள் வருகிறது. பத்துப்பாட்டு, நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் திரு ஆவினன் குடி என்ற சொல்லாட்சி வருகிறது. நக்கீரர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.இவர் கடைச் சங்கத்தை சேர்ந்தவராகக் கருதப்படுகிறது.

       பழனிமலைக் கோவில் கருவறைச் சுவர்களில் உள்ள கல்  வெட்டு படிமங்களை ஆய்வாளர்கள் ஆய்ந்துள்ளனர். இதன் படி ஏழு கல்வெட்டுக்கள் உள்ளது இவை பழனி திருக்கோவிலுக்கு நிலம் நன்கொடைகள் பற்றிக் குறிப்பிடுகிறது. இவற்றில் மல்லிகார்ஜுன் இரண்டாம் தேவராயர் ( 1442-65) உம்மத்தூர் மன்னர் வீரனஞ்சன உடையார் (1507-1519), விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (1509-1529) காலத்தவையாகும். மற்ற நன்கு கல்வெட்டுக்களும் மதுரையை ஆண்ட பிற்கால பாண்டியர்கள் காலத்தில் பொறிக்கப் பட்டவை. அவர்கள் அவனிவேந்தராமன் எனப்படும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன், மற்றும் சடையவர்மன் வீரபாண்டியன் ஆவார்கள். அது போல் பழனி சேர நாட்டின் எல்லைப் பகுதியாகும் பழனிக்கு கிழக்கு பகுதியில் ஒரு ஐயனார் கோவில் வயல் வெளியில் உள்ளது இதில் உள்ள ஐயனார் சிலை உட்க்கார்ந்த நிலையல் கேராளாவில் உள்ள ஐயப்பன் சிலையை ஒத்து இருக்கும் ஆனால் பழனிக்கு அடுத்துள்ள கணக்கன் பட்டி என்னும் கிராமத்தில் அய்யானார் என்று சப்தரிசிகளில் ஒருவராக வைக்கப்பட்டு இருக்கும் இது தமிழக வழக்கப்படியான சிலையாகும். மற்றும் பழனி மலைக்கு மேற்கே வயல் வெளியில் வட்டார வழக்குப்படி அம்மாவெட்டியான் கோவில் ஒன்று இருக்கும் இதில் உள்ள கடவுள் சிலை பரசுராமரின் சிலையாகும் இதில் இருந்து பழனி சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததையும் அறியலாம். மற்றும் சேரமன்னன் கோவிலை புதுப்பித்த கல் வெட்டு செய்தியும் மற்றும் தலபுராணத்தில் சேரன் கெளசால ராசன் பற்றிக் கூறியதில் இருந்தும் அறியலாம். கிறித்துவுக்கு பின் இரண்டாம் நூற்றாண்டிற்கு பின்பே புராதன சமயக் கோவில்களும் உருவ வழிபாடுகளும் இந்தியாவில் பரவின. சைவம் வடபுலத்தில் இருந்து தமிழ் நாட்டில் பரவியதாகும் வைதிக மதம் சங்க காலத்தின் இறுதியிலேயே தமிழகத்தில் கால் கொண்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

       மற்றும் அகநாநூறில் “ முடிவுறழ்தினிதோனெடு வேளாவி. பொன்னுடை நெடுநகர்ப் போதினி --- அக- 61, என்றும் முருகனற் போர்நெடுவேளாவி, யாரு கோட்டினைப் பொதினியாங்கண்--- அக -1, என்று இரண்டு இடங்களில் பொதினி என்ற பெயரில் வழங்குகிறது.சிலப்பதிகாரத்தில் “ வேளாவிக் கோன்மாளிகை காட்டி --- (சில – 28-1987 ) எனவும் மற்றும் சேரன் செங்குட்டுவன்,  இளங்கோவடிகளின் இருவரின் தந்தையான சேரலாதனின் முதல் மனைவி பழனியை ஆண்ட பதுமானின் மகள் எனவும் இவர்களுக்கு பிறந்தவன் தான் நார்முடிக் கெள்ளி எனவும் கொங்கு நாட்டு வரலாறு கூறுகிறது. அனால் இவை எவற்றிலும் மலைமேல் உள்ள சிலையை போகர் நவபாசனத்தல் சிலை செய்தார் அதனை வணங்கினார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. மற்றும் சித்தர்கள் உருவ வழிபாட்டினை எதிர்த்தவர்கள் என்பதும் அவர்கள் தங்கள் உடலே கோவிலாகவும்.அதில் உள்ள ஆன்மாவை பேரான்மாவிடம் சேர்ப்பதே குறிக்கோளாக கொண்டவர்கள் என்பதும் வெளிப்படை இதற்காகவே யோகமுறையை கைக்கொண்டார்கள் என்பது உண்மை மற்றும் போகர் சப்த்தகாண்டத்தில் சைவர்களை கேலிசெய்கிறார். அவரது மேற்படி நூலில் ஆரம்பமே இயம நியம விதிகளையும் அதன் மூலம் முக்திக்கு உரிய வழியினைக் கூறுகிறார். நாம் இப்படி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம் மனிதர்களின் நோய் நீக்கத்திற்காக இந்த சிலை மூலம் நன்மை ஏற்படட்டும் என்று கருதி இருக்கலாம்.

 

       இனி போகர் சத்தகாண்டம் நான்கில் இருந்து சுப்பிரமணியர் பற்றி போகரின் கருத்தைப் பார்ப்போம் :---

வடிவேலர் சுப்பிரமணியர் உற்பத்தி

 

தானான இன்னொமொரு கருமானங்கேளே

தாரணியில் மானிடர் களறியவென்று

கோனான எனதையர் காலாங்கி நாதர்

கொற்றவனார் குருவினது கடாட்சத்தாலே

தேனான வடிவேலர் சுப்பிரமணியர்

தேசத்தில் பிறந்தோர் உண்மையாகவும்

பானான சாத்திர யுக்த்தம் பார்த்து

பகருகிறேன் மாணாக்கன் பிழைக்கவென்று

                                     ----- போகர் சத்த காண்டம் (4) – 586

பிழைக்கவே வடிவேலர் தம்மைத்தானும்

பேரான பூவுலகில் தேவனென்றும்

வழக்கமுடன் சாத்திரங்கள் இதிகாசங்கள்

வளமாகப் பாடிவைத்தார் வினையம்யாவும்

முழக்கமுடன் வடிவேலர் முருகன் தானும்

முற்பிறப்பில் பிரபஞ்சத்தை ஆக்கியனாக

முழக்கமுடன் பிறந்தாதாய் சாத்திரங்கள்

தாரணியில் கவிவாணர்கள் கட்டினாரே

                                      ----- போகசத்த காண்டம் (4) – 587

காட்டினார் வடிவேலர் முருகன்றானும்

காசினியில் ஆறுமுக சொருபமாகி

திட்டமுடன் பள்ளியிலே ஓதும்போது

தீரமுடனர் இனமோ வென்றுகூறி

இட்டமுடன் சொல்லேனவே பிரமனிடம்

எழிலான வடிவேலர் சொல்லேன்றார்

சட்டமுடன் அரிக்குத்தாத்பர்யஞ் சொன்னால்

சாங்கமுடன் நானுரைப்பேன் சத்தியவானே

                                      ----- போகர்சத்த காண்டம் (4) – 588

சத்தியமாய்ச் சொல்லுகையில் இந்திரன்றானும்

சந்தோசமாக வல்லோ தாமழைத்து

வெற்றியுடன் சுரர்களைத்தான் செயிக்க

விருப்பமுடன் தானழைத்துச்சென்றபோது 

புத்தியுடன் பகவானை நமஸ்கரித்து

புகழாக அரக்கர்களைச் சங்கரித்து

நித்தியமுஞ் சூர்சங்காரனாக

நீனிலத்தில் வெகுகாலம் இருந்திட்டாரே

                                       ---- போகர்சத்த காண்டம் (4) 589

இருந்திட்டார் வள்ளிதனை சிறையெடுத்து

எழிலாக அவனிதனில் இருந்தாரென்றும்

பொருந்தவே உலகதனில் சுவாமியாக

போங்கமுடன் வீற்றிருந்தார் சதாகாலந்தான்

வருந்தியே கோடிமனித பேர்களெல்லாம்

குவலயத்தில் மாகாதேவநேன்று சொல்லி

திருநதியே நமஸ்கரித்து தலைகுனிந்து

திகழுடனே கோடியுகம் இருந்தார்தானே

                                     ---- போகர்சத்த காண்டம் (4) 590

தானான் சாத்திரங்கள் சொன்னதெல்லாம்

தகமையுடன் பொய்யாச்சு பொன்னுலகம்

நாமேதான் சொன்னபடி வடிவேலர் தானும்

நாட்டிலே இருந்தாரோ யில்லைகண்டீர்

வேமேதான் பூலோகம் தன்னை விட்டு

விடுபட்டுத் தேகமது மண்ணாய் போச்சு

போமேதான் மண்கூறு மண்ணாய் போச்சு

பூவுலகில் இருந்தாராம் காணோம் பாரே

                                                                                                ----- போகர்சத்த காண்டம் (4) 591 

உலகில் மானிடர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று எனது அய்யன் காலாங்கி நாதர் அன்பினாலே சொல்கிறேன்.சுப்பிரமணியர் உலகில் பிறந்த உண்மையாவும் பலபலவான நூல்கள் (சாத்திரங்கள்) பார்த்து மாணாக்கன் பிளக்கவேன்று கூறுகிறேன். வடிவேலரைதான் உலகில் தேவன் என்றும் வழக்கப்படி இதிகாசங்கள் நூல்கள் வளமையாக பாடிவைத்தனர். விபரம் யாவற்றையும் வடிவேலர் முருகன் தானும் முன் நாளில் பிரபஞ்சத்தை உண்டாகியவனாக முழக்கமுடன் பிறந்ததே நூல்கள் உலகில் புலவர்கள் பாட்டுக் கட்டிவிட்டனர். காட்டினர் வடிவேலர் முருகன்றானும் உலகினில் ஆறுமுக உடலுடன் ஆக திட்டமுடன்.பள்ளியிலே படிக்கும் போது தீர்க்கமுடன் இன்னும் ஒன்று கூறி இட்டமுடன் சொல்லேனவே பிரம்மனிடம் எழிலான வடிவேலர் சொல்லென்றார். சட்டமுடன் திருமாலுக்குகாண காரானா காரியம் சொன்னால் அதை நான் விபரமாக உரைப்பேன் சத்தியமே. சத்தியமாய்ச் சொல்லப்படும் போது இந்திரதானும் மகிழ்ந்து அழைத்து வெற்றியுடன் அரக்கர்களை செயிக்க விருப்பமுடன் அழைத்துச் சென்றபோது சென்றபோது புத்தியுடன் பகவானை வணங்கி புகழாக அரக்கர்களை கொன்று நித்திய காலமும் சூரசங்கரானாக உலகில் வெகுகாலம் இருந்திட்டார். அப்படியே வள்ளி தனை சிறை எடுத்து அழகாக் உலகில் இருந்தார் என்றும் உலகு தனில் கடவுளாக பெருமிதத்துடன் இருந்தார் எல்லாக் காலமும் இவ்வாருநினைந்து கோடிக்கணக் காண மனிதர்கள் இந்த உலகினில் மாக தேவன் என்று சொல்லி கூறியே தலை குனிந்து வணங்கியே கோடியுகம் இருந்தார்கள் மேற்கண்டவாறு நூல்கள் சொன்னதெல்லாம் உண்மையாகப் பொய்யாய் போச்சு. நாம் சொன்னபடி வடிவேலர் தான் நாட்டில் இருந்தாரோ இல்லை காண்பீரே. உலகம் தன்னை விட்டு உடலும் விடுபட்டு மண்ணாய் போச்சு இந்த உலகில் இருந்த யாரு காணோம் பாரே. 

இவ்வாறு கடவுள் சுப்பிரமணியர் புராணப்புரட்டை கூறுகிறார் பெரும்பாலும் சித்தர்கள் உருவ வழிபாடு மற்றும் வேத வேள்வி வழிபாட்டை எதிர்த்தே தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

        

                  பழனியும் மாரியம்மன் கோவிலும்

பழனியில் சைவ சமயப் பிரிவுகால் ஒன்றான பாசுபதம் கபாலிக வழிபாடு இருந்துள்ளது இதன் படியே உஜ்ஜனியில் காளி கோயில் வழிபாட்டின் கூறாக பழனி – திண்டுக்கல் சாலையில் பழனி யாண்டவர் கலைக் கல்லூரிக்கு நேர் எதிரே உள்ள காலி கோயில் உஜயினி மாகாளி கோயில் ஆகும் இது சில இடங்களில் உச்சிமாகாளி அம்மன் என்று மக்கள் வட்டார மொழியில் வழங்கிறது. இது கபாலிக வலிபாட்டிக்கு உரிய இடமாகும் இதே போல் பழனி மாரியம்மன் கோயிலும் அதனைச் சார்ந்ததே அதனால் தான் பழனி மாரியம்மன்  வழிபாட்டின் போது வரும்  வண்டி வேஷங்களில் முக்கியமானது வண்டிமாகாளி வேசமாகும். இதில் வண்டியில் காளியும் அவளுக்கும் சிவனுக்கும் இடையில் உண்டான போர் காட்சியையே சித்தரித்து நடத்துவார்கள், வண்டியின் நான்கு பக்கங்களிலும் பரிவார பெண் தேவதைகள் இருப்பதாகவும் கீழே அரிவாளை தூக்கி சிவன் சண்டை செய்வதாகவும் காட்சிப் படுத்துவார்கள் ஆனால் காலப்போக்கில் கீழே சண்டை செய்யும் சிவனை கருப்பான சாமி  என்று மக்களின் வட்டார வழக்குப் படி அழைக்கின்றனர். இது சாக்தம் என்ற சக்தி வழிபாட்டின் படி சக்தியே பெரும் தெய்வம் ஏன்ற கோட்பாட்டினை வலியுறுத்துவதாகும் இது போல் பழனியைச் சுற்றி தெற்கில் மருத காளியம்மன் கோயில், வைகாபுரி குளத்தின் கரையில் படிப்பாரைக் காளியம்மன் கோயில், வடக்கில் உள்ள குளக்கரையில் உள்ள பெரிய காளியம்மன் கோயில் போன்ற புராதன பெண் தெய்வக் கோயில்கள் உள்ளதால் இதனை அறியலாம்.

சண்முக நதிக்கரையில் (தற்போது கருமாதி செய்யும் இடமாக விளங்கும் )